Type Here to Get Search Results !

கொரோனா எதிரொலி: டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு!

கொரோனா தடுப்பு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அரசு மதுக்கடைகள் வழக்கமாக பகல் 12 மணிக்கு திறக்கப்படுகின்றன. இரவு பத்து மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கின்றன. தற்போது நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல பகல் 12 மணிக்கு திறக்கப்படும். இரவில் ஒரு மணி நேரம் முன்னதாக 9 மணிக்கே அரசு மதுக்கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்றும் தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.