Type Here to Get Search Results !

விளையாட்டாய் சில கதைகள்: நம்பர் 1 கிரிக்கெட் தம்பதி

டென்னிஸ், தடகளம், நீச்சல் போன்ற துறைகளில் உள்ள சர்வதேச வீரர், வீராங்கனைகள் தங்களுக்குள் காதலித்து திருமணம் செய்துகொள்வது அடிக்கடி நடக்கும் விஷயமாக உள்ளது. ஆனால் கிரிக்கெட்டில் இது குறைவு. இந்தச் சூழலில் சர்வதேச கிரிக்கெட் உலகின் ஒரே காதல் தம்பதியாக வலம் வருகிறார்கள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கும், அந்நாட்டு பெண்கள் அணியின் விக்கெட் கீப்பரான அலிஸா ஹீலியும்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதற்கு முன்பே, அதாவது ஸ்டார்க்கின் 9-வது வயதிலேயே அவருக்கு அறிமுகமாகி இருக்கிறார் அலிஸா ஹீலி. பிரபல ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பரான இயான் ஹீலியின் மருமகள்தான் அலிஸா ஹீலி. தன் மாமாவைப் பின்பற்றி தானும் விக்கெட் கீப்பராக விரும்பிய அலிஸா, சிட்னி வடக்கு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் இணைய, அங்கேதான் ஸ்டார்க்கை முதல்முறையாக சந்தித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.