
வங்கக் கடலில் உருவாகவுள்ள புயல், குமரிக்கடல் வழியே கடந்து செல்லும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நாளை தென் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறும்போது “ தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக மாற உள்ளது. இலங்கை திரிகோணமலை அருகே கரையைக் கடக்கும் இந்தப் புயல் மன்னார் வளைகுடா பகுதிக்கு வந்து பின்னர் குமரிக்கு பகுதிக்கு வருகிறது. இதனால் இன்று தென் தமிழகத்தின் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை புயல் கரையைக் கடக்க இருப்பதால் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை , கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதீத கனமழை பெய்யக்கூடும். டிசம்பர் 4 தேதி வரை மீனவர்களுக்கு கடலுக்குச் செல்லவேண்டாம்” என்றார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News