Type Here to Get Search Results !

கொரோனாவுக்கு பிந்தைய சிக்கலால் அவதி - அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் காலமானார்

கொரோனாவுக்கு பிந்தைய உடல்நல சிக்கல்களால் அவதிப்பட்டு வந்த அசாம் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகாய் சிகிச்சை பலனின்றி காலமானார், அவருக்கு வயது 86.

image

அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தருண் கோகோய், கோவிட்-19க்கு  பிந்தைய உடல்நல சிக்கல்களுடன் தனது உயிருக்கு போராடி வந்தார், அவரின் பல உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக இன்று உயிரிழந்தார் என்று மாநில சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். மாநிலத்தில் காங்கிரஸின் தலைவரான தருண் கோகோய் ஆகஸ்ட் 25 ஆம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கவுகாத்தி மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் கோவிட் -19 ல் இருந்து மீண்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீடுதிரும்பினார். ஆனால்  கோவிட்-19க்கு  பிந்தைய  உடல்நல சிக்கல்களால் நவம்பர் 2 ஆம் தேதி மீண்டும்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.