Type Here to Get Search Results !

PSL | சாம்பியன் பட்டம் வென்றது இஸ்லாமாபாத் யுனைடெட் அணி!

கராச்சி: நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) டி20 கிரிக்கெட் தொடரில் முல்தான் சுல்தான் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இஸ்லாமாபாத் யுனைடெட் அணி. பிஎஸ்எல் தொடரில் இது அந்த அணி வெல்லும் மூன்றாவது பட்டம்.

கராச்சி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரிஸ்வான் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உஸ்மான் கான், 57 ரன்கள் எடுத்திருந்தார். இப்திகார் அகமது, 20 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். இஸ்லாமாபாத் யுனைடெட் அணி சார்பில் இமாத் வாசிம், 5 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.