Type Here to Get Search Results !

“காவல்துறை அதிகாரியை காஷ்மீருக்கு மாற்றுவேன்”: சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு

காவல்துறை அதிகாரியை, காஷ்மீருக்கு மாற்றுவேன் என கூறிய சுவேந்து அதிகாரி மீது மேற்கு வங்க காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திரிணாமூல் காங்கிரஸிலிருந்து பிரிந்து பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய சுவேந்து அதிகாரி, பொய் வழக்குகளை பதிவு செய்யும் காவல்துறை அதிகாரி அமர்நாத், காஷ்மீரின் அனந்த்நாக் அல்லது பாரமுல்லாவுக்கு மாற்றப்படுவார் என்றார்.

இதையடுத்து அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சுவேந்து அதிகாரி மீது மேற்குவங்க காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.