Type Here to Get Search Results !

ராமேஸ்வரம்: இரட்டை மடி வலைகளை பயன்படுத்திய 13 விசைப்படகுகளுக்கு அனுமதி ரத்து

ராமேஸ்வரத்தில் இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி வந்த 13 விசைப்படகுகளுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் அனுமதி சீட்டை பெற்று கடலுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் சிலர் அரசு விதிமுறைகளை மீறி இரட்டைமடி வலைகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.  மீன்வளம் அழியும் அபாயம் இருப்பதால் இரட்டைமடி வலைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள், தொடர்ந்து இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி வந்த 13 விசை படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீன்வளத் துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி வந்த 13 விசைப்படகுகளுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை ரத்து செய்துள்ளனர். தொடர்ந்து மீன்வளத்துறை அலுவலகத்திற்கு 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.