Type Here to Get Search Results !

“விவேக்கின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கண்ணீர் விட்டு அழுத வடிவேலு

பொதுநல சிந்தனை அதிகம் கொண்ட நண்பர் விவேக் மறைவு செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று நடிகர் வடிவேலு வீடியோ மூலமாக கண்ணீருடன் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

விவேக்கின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கண்ணீர் விட்டு அழுதபடி வீடியோ வெளியிட்டிருக்கிறார் நடிகர் வடிவேலு. அதில், “விவேக்கின் ரசிகன் நான். என்னை விட யதார்த்தமாக, எளிமையாக  மனதில் பதியக்கூடிய வகையில் பேசக்கூடியவர் விவேக். அப்துல் கலாம் அவர்களுடன் நல்ல நெருக்கமாக இருந்து மரம் நடுதல் விழிப்புணர்வு பிரச்சாரம் அதிகம் செய்தவர் அவர். நானும் அவரும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளோம். வெளிப்படையாக எதையும் பேசக்கூடிய மிக நல்ல மனிதன் விவேக். அவரது இழப்பை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நான் மதுரையில் இருப்பதால் விவேக் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லை” என தெரிவித்திருக்கிறார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.