Type Here to Get Search Results !

இந்தியா: 24 மணி நேரத்தில் 2.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  2,61,500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேர நிலவரம் 

இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டதாவது, “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,61,500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,501 பேர் தங்களது உயிரை கொரோனாவிற்கு பலி கொடுத்துள்ளனர்.

image

ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு நிலவரம் 

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தற்போது வரை 1,47,88,109 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதில் 18,01,316 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 1,28,09,643 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12,26,22,590 பேருக்கு கொரோனாத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 1,77,150 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.