
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பே தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும் என தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது.
தமிழகத்தில் கொரோனாவைரஸ் பரவலின் வேகம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை தேர்வுகள் இயக்ககம் ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பே தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும் என தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது.
மே 2ஆம் தேதி தொடங்கவிருந்த தேர்வு, கொரோனா பரவலைக் கருத்தில்கொண்டு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது நடைபெற்றுவரும் செய்முறைத் தேர்வு மட்டும் திட்டமிட்டப்படி நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News