Type Here to Get Search Results !

4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து இளவரசி விடுதலை

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து பெங்களூரு சிறையில் இருந்து சசிகலாவின் உறவினர் இளவரசி விடுதலை ஆகியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் நிறைவு மற்றும் அபராதம் செலுத்தியதால் கடந்த 27ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில், இன்று இளவரசி விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

image

இதனிடையே, கொரோனா பாதிக்கப்பட்ட இளவரசி, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை காலம் நிறைவடைந்ததையடுத்து, இளவரசி இன்று விடுதலை ஆகியுள்ளார். அவருக்கு அவரது உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.