Type Here to Get Search Results !

பட்ஜெட் விலை.. அசத்தல் சிறப்பம்சங்கள்.. விவோ Y20A ஸ்மார்ட்போன்!

அண்மையில் இந்தியாவில் அறிமுகமான விவோ நிறுவனத்தின் Y20A ஸ்மார்ட்போனின் விற்பனை ஆரம்பமாகியுள்ளது. வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் டிஸ்பிளே, ரியர் சைடில் மூன்று கேமிரா என சர்வ வசதிகளும் அடங்கிய ஸ்மார்ட் போனாக பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ளது.

image

ஃபங்க்ஷன் டச் இயங்குதளம் கொண்ட ஆண்ட்ராய்ட் 11இல் இந்த போன் இயங்குகிறது. 5000 மில்லியாம்ப் கொண்ட இன்பில்ட் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என இரண்டிலும் இந்த போன் விற்பனையாகிறது. வெள்ளை மற்றும் நீல வண்ணத்தில் இந்த போன் கிடைக்கிறது. 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட இந்த போனின் விலை 11490 ரூபாய்க்கு கிடைக்கிறது. 

விவோ இந்தியா ஸ்டோர் மூலம் போன் வாங்குபவர்களுக்கு பழைய போனை கொடுத்துவிட்டு புதிய போனை பெற்றுக் கொள்ளும் எக்ஸ்சேஞ் வசதியும், சுலப மாத தவணை வசதியும் கொடுக்கப்படுகிறது. 720 X 1600 பிக்சல் ரெஸலுஷனில் இந்த போனின் திரை ஒளிர்கிறது. முன்பக்கத்தில் 8 மெகா பிக்சல் கேமிரா இடம்பிடித்துள்ளது. இதன் மொத்த எடை 192 கிராம் மட்டுமே. மைக்ரோ USB சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.