Type Here to Get Search Results !

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திமுக போராட்டம்

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் திமுகவினர் போராடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முன்னிறுத்தி பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில், போராட்டம் தொடர்ந்து வருகிறது.

image

இந்நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் உடையார்பட்டி எஸ்.ஆர்.பி கிரிக்கெட் மைதானத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையில் தயாநிதி மாறன், சேகர் பாபு உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

image

இதனிடையே சேலத்தில் ஸ்டாலின் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க செல்லும் திமுகவினர் அங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் ஓமலூர், அயோத்தி பட்டினம் உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.