Type Here to Get Search Results !

சென்னை: பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் சென்னையில் பல இடங்களில் இரவு நேரங்களில் சாரல் மழை பெய்தது. அதைத்தொடர்ந்து, அதிகாலை முதல் அண்ணா நகர், கோயம்பேடு, வடபழனி, கே.கே.நகர், அசோக் நகர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

image

அதேபோல், புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.